- இந்தோனேஷியா நாட்டின் ராணுவத்துக்குச் சொந்தமான ஹெர்குலஸ் சி – 130 என்னும் ரக விமானம், பப்புவா மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். திமிகா – வாமெனா நோக்கி, உணவு பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம், மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியது. இதில் மூன்று விமானிகள் மற்றும் 10 ஊழியர்கள் உயிரிழந்தனர்
- 2015-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு, அகதிகளுக்கான ஐநா ஆணையத்தை துணை குடியரசுத் தலைவர் ஹமிது அன்சாரி தலைமையிலான நடுவர் குழு கடந்தாண்டு தேர்வு செய்து அறிவித்தது.
- விமானப் படையில் பணிபுரி யும் முஸ்லிம் மதத்தவர்கள் தாடி வைத்துக் கொள்ள தடை விதித்து, 2003-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த ரகசிய உத்தரவை எதிர்த்து, விமானப் படை அதிகாரி களான முகமது ஸுபெய்ர் மற்றும் அன்சாரி அஃப்தாப் அகமது ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்களை தாக்கல் செய்தனர்.நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு, இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தது. 'விமானப் படையின் நலனுக்காகவும், ஒழுங்கமைப் புக்காகவும் இந்த உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. இதற்கு பாது காப்பு காரணங்களும் உண்டு' என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், 'மத்திய அரசின் உத்தரவு, குடிமக்களுக்கான அடிப்படை உரிமையில் தலை யிடுவதாக அமைந்துள்ளது. மேலும், சீக்கிய மற்றும் முஸ்லிம் அதிகாரிகள் முன் அனுமதிடன், மத காரணங்களுக்காக தாடி வளர்க்கலாம் என, 1990-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதியிட்ட கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப் பதற்கு முரணானது' என்று மனு தாரர்கள் தரப்பில் கூறப்பட்டது.இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விமானப் படையில் தாடி வைத்துக்கொள்ள மத்திய அரசு விதித்துள்ள தடை, அடிப்படை உரிமைகளை மீறுவதாக ஆகாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.மனுதாரர்கள் ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர் களின் மனுவை விசாரித்த நீதிபதி, முஸ்லிம் மத நூல்களை ஆராய்ந்து, 'முஸ்லிம் மதத்தில் தாடி வளர்ப்பது கட்டாயமில்லை' எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.
- தனித்தமிழ் இயக்க முன்னோடியும், உலகத் தமிழர் களின் உரிமைக்காக பாடுபட்டவரு மான புலவர் மகிபை பாவிசைக் கோவின் உடல் பெங்களூருவில் நேற்று தமிழ் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. பெங்களூருவில் வசித்த புலவர் மகிபை பாவிசைக்கோ (74) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகிபாலன்பட்டியில் 1942 டிசம்பர் 15-ம் தேதி பிறந்தார். புலவர் மகிபை பாவிசைக் கோவின் உடல் புலிக்கொடி போர்த்தப்பட்டு நேற்று லிங்கராஜா புரத்தில் பொதுமக்கள் அஞ்சலிக் காக வைக்கப்பட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த அவரது சகோதிரி மெஃருனிஷா உறவினர்களுடன் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். நீண்ட காலமாக பிரிந்திருந்த புலவர் மகிபை பாவிசைக்கோவின் மனைவி பாவொளி, மகன் புரட்சிக்கனல் ஆகியோரும் குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினர்இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த இவரது இயற்பெயர் பீர் முகமது. 12 வயதிலே தமிழில் புலமைப்பெற்று திறம்பட பாட்டு இசைப்பதில் அரசனைப் போல திகழ்ந்தார். தமிழ் புலவர்களின் தூண்டுதலினால் தனது பெயரை பாவிசைக்கோ என மாற்றிக் கொண்டார். சங்க கால புலவர் கணியன் பூங்குன்றன் பிறந்த மகிபாலன்பட்டியில் பிறந்ததால் தனது பெயருக்கு முன்பாக மகிபை கிராமத்தையும் சேர்த்து புலவர் பாவிசைக்கோ பயன்படுத்தினார்.
- பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை ஊக்குவிக்கும் விதமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கு ரூ.340 கோடி அளவிலான தினசரி, வாராந்திர ரொக்கப் பரிசை நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் அறிவித்துள்ளார்.இது கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் முதல் தொடங்கி ஏப்ரல் 14-ம் தேதி வரை நீடிக்கும்.
இதற்காக 'லக்கி கிரஹக் யோஜனா' மற்றும் 'டிஜி தன் வியாபார் யோஜனா' ஆகிய பரிசளிப்புத் திட்டங்களை நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் அறிவித்தார். இந்த இரண்டு திட்டங்களும் ரூ.50 முதல் ரூ.3,000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது அனைத்துப் பிரிவினரும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைக்குள் கொண்டு வருவதற்காக சிறிய தொகைக்கு கூட பரிசளிப்புத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதனை கிறிஸ்துமஸ் பரிசு என்று அழைக்கும் அமிதாப் காந்த், டிசம்பர் 25 முதல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி வரை இந்தப் பரிசளிப்புத் திட்டம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய நேஷனல் பேமண்ட் கமிஷன் டிசம்பர் 15 முதல் 100 நாட்களுக்கான ரூ.1000 பரிசுத் தொகை வென்ற 15,000 பேர்களை அறிவிக்கும். அதே போல் 7,000 நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களுக்கு வாராந்திர பரிசு அறிவிக்கப்படும்.
இதில் P2P and B2B மற்றும் கிரெடிட் கார்டுகள், இ-வாலட் பரிவர்த்தனைகள் அடங்காது.
"உத்தேசமாக 5% இந்தியர்களே டிஜிட்டல் பேமண்ட் முறையைப் பயன்படுத்தி வருகின்றனர். 40 கோடி ஸ்மார்ட் போன்கள் 25 கோடி ஜன் தன் வங்கிக்கணக்குகளுடன் நம்மிடையே மிகப்பெரிய முறைசாரா பொருளாதாரப் பிரிவு உள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நவம்பர் 8 முதல் டிசம்பர் 7 வரை பி.ஓ.எஸ். பரிவர்த்தனையில் 95% உயர்வு ஏற்பட்டுள்ளது. ரூபே கார்டு மூலம் பணப்பரிவர்த்தனைகள் 316%, மற்றும் இ-வாலட் பரிவர்த்தனை முறை 271% அதிகரித்துள்ளன" என்றார். - சூரிய மின்சக்தி (சோலார்) நகரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு 30.36 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து கோவை நகரம் இணைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மக்களவையில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை எழுத்துபூர்வமாக அளித்த பதில்:"இந்த ஆண்டு நவம்பர் 30 வரையிலான கடந்த 3 ஆண்டுகளில் இத்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட 30.36 கோடியில் இதுவரை ரூ. 12.98 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கோவை, கேரளாவில் கொச்சி, கர்நாடகாவில் மைசூரு என நாடு முழுவதும் 60 நகரங்கள், சூரிய மின்சக்தி நகரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தபட்சம் ஒரு நகரம் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகரத்துக்கும் ரூ.50 லட்சம் வரை மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.8 முன்மாதிரி சூரிய சக்தி நகரங்களுக்கு ரூ.9.50 கோடி வரை நிதியுதவி அளிக்கப்படும். இதுபோல் 15 முன்னோடி சூரிய மின்சக்தி நகரங்களுக்கு ரூ.2.50 கோடி அளிக்கப்படும்.
- தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் செயல்படும் மதுபானக் கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இந்தக் கடைகளுக்கான உரிமங் களை வரும் மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு புதுப்பிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் அமைந்துள்ள மது பானக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி பாமக உட்பட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இம்மனுக்களில் கூறியிருப்பதாவது:தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் அமைந்துள்ள மது பானக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி பாமக உட்பட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இம்மனுக்களில் கூறியிருப்பதாவது:கடந்த 2015-ம் ஆண்டு மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, முந்தைய ஆண்டில் நாடு முழுவதும் 5 லட்சம் சாலை விபத்துகள் நடந்ததில், ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் இறந்தவர் களை விட மும்மடங்கு எண்ணிக் கையில் வாகன ஓட்டிகள் காய மடைந்துள்ளனர் என்றும் கூறப் பட்டுள்ளது.தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஆனாலும், ஆந்திரா, தெலங் கானா ஆகிய மாநிலங்கள் இந்த பரிந்துரையை அமல்படுத்த வில்லை. கலால் சட்டத்தில் திருத் தம் செய்ய மறுத்து நெடுஞ்சாலை களில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி வழங்கி வருகின்றன.மேலும், இந்திய சாலைகளில் ஒவ்வொரு நாளும் 1,374 விபத்துகள் நடப்பதாகவும், அதில் 400 பேர் உயிரிழப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதன்படி, ஒரு மணி நேரத்துக்கு 57 விபத்துகளும், 17 மரணங்களும் நிகழ்கின்றன.பிரேசில் நாட்டில் கடந்த 2015-ல் நடந்த சாலைப் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில், இந்தியா உட்பட உலகம் முழுவதிலுமிருந்து 2,200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது சாலைப் பாதுகாப்பு குறித்து நிறைவேற்றப்பட்ட பிரேசிலியா பிரகடனத்தின்படி, மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச கலால் கொள்கைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய பாதுகாப்பு விதிமுறை களை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தன.இம்மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், "தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை சுட்டிக்காட்டும் பலகை களுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. நெடுஞ்சாலை களில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் எந்த மதுபானக் கடையும் இருக்கக் கூடாது.மதுபானக் கடைகள் இருப்பதற் கான விளம்பர பலகைகளும் நெடுஞ்சாலைகளில் வைக்கக் கூடாது. இத்தகைய விளம்பரப் பலகைகள்தான் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பும் முக்கிய அம்சமாகும். தற்போது நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளின் உரிமங்களை வரும் மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு புதுப்பிக்கக்கூடாது" என்று உத்தரவிட்டனர்.செயல் திட்டம்இந்த உத்தரவை அனைத்து மாநில தலைமைச் செயலர்களும் சம்பந்தப்பட்ட கலால்துறை அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்துடன் கலந்து ஆலோ சித்து செயல்படுத்துவது குறித்து செயல்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்
- மாற்றுத்திறனாளிகளை பாரபட்ச மாக நடத்துவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா மாநிலங் களவையில் நேற்று நிறைவேற் றப்பட்டது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே பணமதிப்பு நீக்க நடவடிக் கையைக் கண்டித்து எதிர்க் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட் டுள்ளன.இந்நிலையில் மாநிலங் களவை நேற்று காலையில் கூடியதும், பூஜ்ஜிய நேரத்தின் போது மாற்றுத் திறனாளிகள் உரிமை மசோதாவை (2014) உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று குலாம் நபி ஆசாத், மாயாவதி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.இதற்கு பதில் அளிக்கும் வகையில், நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, "இந்த மசோதா உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறை வேற்றப்படும்" என்றார். இதை யடுத்து இந்த மசோதா மீது குறுகியகால விவாதம் நடை பெற்றது. பின்னர் குரல் வாக்கு மூலம் இந்த மசோதா நிறைவேற் றப்பட்டது.ரூ.5 லட்சம் வரை அபராதம்மாற்றுத் திறனாளிகள் சட்டத் துக்கு (1995) மாற்றாக, சில திருத்தங்களுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, மாற்றுத் திறனாளி களை பாரபட்சமாக நடத்து வோருக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். மேலும் குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும் அபராதமும் விதிக்க முடியும்.
- வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் குறித்த ஓர் ஆய்வறிக்கையில், அதிகரித்து வரும் கடல் வெப்பமே ஆந்திரா, தமிழக பகுதிகளில் தீவிர புயல்கள் அதிகமாக உருவாவதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.'எர்த் சயின்ஸ் அண்ட் கிளைமேடிக் சேஞ்ச்' என்ற பத்திரிகையில் ஓர் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அந்த அறிக்கை வெளியிடப்பது.அதில், அதிகரித்து வரும் கடல் வெப்பமே ஆந்திரா, தமிழக பகுதிகளில் தீவிர புயல்கள் அதிகமாக உருவாவதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வில் முக்கிய பங்குவகித்த அலகாபாத் பல்கலைக்கழக பேராசிரியர் அசுதோஷ் மிஸ்ரா, "வங்கக் கடல் பகுதியில் சமீப காலத்தில் அதிகளவில் புயல் உருவாகி வருகின்றன. 1891-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை தாக்கிய புயல்களில் புள்ளிவிவரங்களை தொகுத்து ஆராய்ந்தபோது மே, அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்களில் தமிழகம், ஆந்திர கடல்பரப்பில் புயல் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.அண்மைக்காலங்களில் புயல்களின் எண்ணிக்கையைவிட அதிதீவிர புயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது முன்பெல்லாம் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் புயலாக உருவாகும். ஆனால், அவற்றின் தாக்கம் கரையைக் கடக்கும்போது சற்று குறைவாக இருக்கும். ஆனால், கடல் வெப்பம் அதிகரிப்பதால் தீவிர புயல்கள் அதிகமாக உருவாகின்றன. அவ்வாறு உருவாகும் தீவிர புயல்கள் பல சற்றும் வலுவிழக்காமல் தீவிர புயலாகவே கரையைக் கடந்துவிடுகின்றன. இதனால், தாக்கம் அதிகரித்துள்ளது.அதிலும் குறிப்பாக நவம்பர் மாதத்தில் அதிகளவில் தீவிர புயல்கள் உருவாகின்றன. தோராயமாக ஒவ்வோர் ஆண்டும் வங்கக் கடலில் நவம்பர் மாதத்தில் 5 முதல் 6 புயல்கள் உருவாகின்றன. அவற்றின் வேகம் 34 நாட் என்றளவில் இருக்கிறது. சில புயல்களில் காற்றின் வேகம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அதாவது 48 நாட் என்றளவில் இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.கடந்த 25 ஆண்டுகளாக வங்கக்கடலில் உருவாகும் பெரும்பாலான புயல் தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ இருக்கின்றன என புவி அறிவியல் துறை அமைச்சர் மாதவன் ராஜீவன் தெரிவித்துள்ளார்.பெரும்பாலும் புயல்கள் உருவாகாத அரபிக்கடலிலும்கூட அண்மைக் காலங்களில் குறைந்த காற்றழுத்தங்கள் அவ்வப்போது உருவாகி வருவதாக அவர் கூறினார்.கடந்த 30 ஆண்டுகளில் சமுத்திரங்களின் வெப்ப நிலை அதிகரித்துள்ளதாக நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்ற ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே, அடிக்கடி புயல் உருவாவதற்கு காரணமாக இருக்கிறது. மேலும், தொழில்மயமாக்குதல் கடல் வெப்ப அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக இருப்பதோடு புயல்களின் திசைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் அதிக பங்குவகிக்கின்றன என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது