தமிழ்நாடு இயற்கை அமைப்பு (TAMIL NADU NATURAL STRUCTURE)
- நாடேரி புழல் ஏரி பாலாறு செய்யாறு ஜவ்வாதுமலை ஏலகிரி சாத்தனூர் பொன்னி ஆறு, செஞ்சி மலை, வெள்ளாறு, ஸ்டேன்லி நீர்த்தேக்கம், அரக்கவதி, சிம்ஷா,கர்நாடகா, காவிரி, கபினி, கவன் நீர்வீழ்ச்சி, கல்வராயன் மலை, கொள்ளிடம், சித்தேரி மலை, தொட்டபெட்டா, நீலகிரிமலை, முக்கூர்த்தி ஏரி, குன்னூர் மலை, மானிசாகர் நீர்த்தேக்கம், நொய்யல், மலப்புலா, கீழ்காவிரி சமவெளி, அமராவதி, காவிரி, கொள்ளிடம், கொல்லிமலை, பச்சமலை, ஆண்டிப்பட்டி மலை, கம்பம் பள்ளத்தாக்கு, மேல் வைகை பள்ளத்தாக்கு, பழனிமலை, கீழ் வைகை சமவெளி, கேரளா, வைகை, குண்டாறு, வைப்பாறு, தாமிரவருணி அகஸ்தியர் மலை, கோதையாறு, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா தமிழ்நாடு 1076 கி.மீ. நீள கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 3-ஆவது நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. ( முதலாவது குஜராத், இரண்டாவது ஆந்திரப்பிரதேசம்) தமிழகக் கடற்கரையானது 2004ம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
- தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு சற்று ஏறக்குறைய முக்கோண வடிவ அமைப்பினைப் பெற்றுள்ளது.
- மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மேற்கு மலைத் தொடர்களாலும், கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் மற்றம் அதனை ஒட்டியுள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளாலும், தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலாலும் சூழப்பட்டுள்ளது.
இயற்கை அமைப்புகள்
- மலைகள்
- பீடபூமிகள்
- சமவெளிப் பகுதிகள்
- கடலோரப் பகுதிகள்
மலைப்பகுதி
(அ) மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள்
(ஆ) கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் நீலகிரியில் தொட்டபெட்டா என்ற இடத்தில் இணைகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலைகள்
- மேற்குக் கடற்கரைக்கு இணையாகச் செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் கடற்கரையோரத்தில் படிகட்டுகளைப் போல் அமைந்திருப்பதால், இதனை ஆங்கிலேயர் `மேலைப்படிகள்' என்று அழைத்தனர்.
- தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு பரவியுள்ளது. இதன் சராசரி உயரம் 1000 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரை உள்ளது.
- தொட்டபெட்டா (2620மீ) மற்றும் முக்கூர்த்தி (2540மீ) ஆகியவை தமிழ்நாட்டில் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளது உயரமான சிகரங்கள் ஆகும்.
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்
நீலகிரி மலை
- கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800-2400 மீட்டர் உயரத்தில் உள்ளது.
- இதன் உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா (2673 மீ). இதுவே தமிழகத்தின் உயர்ந்த மலைச்சிகரமாகும்.
- உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி ஆகியவை இதிலுள்ள முக்கிய கோடை வாழிடங்களாகும்.
ஆனை மலை
- ஆனை மலையின் உயர்ந்த சிகரம் ஆனை முடி (2695மீ)
- இது தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரமாகும்.
- இது பாலக்காட்டு கனவாயில் உள்ளது.
பழனி மலை
- நீலகிரியிலிருந்தும், கேரளாவின் ஆனைமுடி மலையிலிருந்தும் 1500 மீ முதல் 2000 மீ உயரத்தில் ஓர் கிளைத்தொடர் குன்று கிழக்கு நோக்கி செல்கின்றது. இதற்கு பழனிக் குன்றுகள் என்று பெயர்.
- பழனிமலை ஒரு தாழ்ந்த குன்றாகும், பழனி மலைக்கு தெற்கில் ஏலக்காய் மலைகள் அமைந்துள்ளன.
- ஏலக்காய் மலையில் பெரியார் ஏரிக்கு அருகில் தேக்கடி சரணாலயம் உள்ளது.
கொடைக்கானல் மலை
- கொடைக்கானல் மலை பழனி மலையின் தொடர்ச்சியாகும். இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.
- கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சிப்பூ பூக்கின்றது.
- பழனிக் குன்றுகளுக்கு தெற்கே வருச நாடு, ஆண்டிப்பட்டி என்ற இரு மலைத் தொடர்கள் காணப்படுகின்றன.
குற்றாலம் மற்றும் மகேந்திரகிரி மலை
- குற்றாலம் மற்றும் மகேந்திரகிரி மலைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளன.
- பாலக்காட்டு கணவாய்க்கு (25கி.மீ நீளம்) தெற்கே ஆண்டிப்பட்டி மலை, ஏலமலை, அகத்தியர் மலை ஆகிய மலைகள் காணப்படுகின்றன.
கம்பம் பள்ளத்தாக்கு
- ஏலமலைப் பகுதியில் செழிப்பான கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
- ஆண்டிப்பட்டி குன்றுகளையும் வருச நாட்டையும் கம்பம் பள்ளத்தாக்கு பிரிக்கின்றது.
செங்கோட்டை கணவாய்
வருஷநாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி செங்கோட்டை கணவாய் என்று அழைக்கப்படுகின்றது.
கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
- மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு ஒப்பிடும் போது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகின்றன.
- வடகிழக்கிலிருந்து தென்மேற்காக வேலூர், தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் விரவிக் காணப்படுகின்றன.
- இவற்றின் சராசரி உயரம் 1100 மீட்டர் முதல் 1600 மீட்டர் வரை உள்ளது.
தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்
ஜவ்வா மலை
- ஜவ்வாது மலை வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- இங்குள்ள ஏலகிரி ஒரு கோடை வாழிடமாகும்.
கல்வராயன் மலை
- இது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.
- இதில் வெள்ளாற்றின் துணை ஆறுகள் உற்பத்தியாகின்றன.
சேர்வராயன் மலை
- இம்மலை சேலம் மாவட்டத்தில் உள்ளது. இதன் உயர்ந்த சிகரம் சோலைக்காடு (1640மீ).
- இங்கு பாக்சைட் தாதுக்கள் கிடைக்கின்றன.
- இம்மலையில் அமைந்துள்ள ஏற்காடு ஒரு கோட்டை வாழிடமாகும்.
பச்சை மலை
- இது பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- இங்கு உலகிலேயே முதல் தரமான கருப்பு கருங்கல் கிடைக்கின்றது.
கொல்லி மலை
- இம்மலை நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.
- இங்கு பாக்சைட் தாது கிடைக்கின்றது.
பாலமலைக் குன்றுகள்
- பச்சை மலை மற்றும் கொல்லி மலைக்குக் கிழக்கில் பாலமலைக் குன்றுகள் காணப்படுகின்றன.
- இங்கும் கருங்கள் மற்றும் கல்தூள்கள் கிடைக்கின்றன.
- கஞ்ச மலை மற்றும் சாக்குக் குன்றுகள் ஆகியவை சேலம் பகுதியில் அமைந்துள்ளன.
- இவற்றிலிருந்து இரும்புத்தாது மற்றும் மேக்னசைட் தாதுக்கள் அதிகம் கிடைக்கின்றன.
- சித்தேரி மலை தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- சென்னிமலை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ஆதாரம் : கல்விச்சோலை
0 comments:
Post a Comment